Viral
போலிஸார் விசாரணையில் வெளிவந்த பிச்சைக்காரரின் உண்மை முகம்!
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஜெகன்னாதர் ஆலயம். அங்கு பிச்சை எடுப்பவர்களில் ஒருவர்தான் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில், ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை வண்டியை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்.
ரிக்ஷாவை எடுக்க சொல்லி கிரிஜா சங்கர் கேட்டுள்ளார், அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கிரிஜா சங்கர் ரிக்ஷாக்காரரை பலமாக தாக்கி விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், இருவரிடமும் புகார் மனு எழுதி தருமாறு கேட்டுள்ளனர். அப்போது பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, தனது புகார் மனுவை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைப் பார்த்த ஆச்சரியமடைந்த போலிஸார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
போலிஸாரின் விசாரணையில், அவர் புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.யின் மகன் கிரிஜா சங்கர் என்பதும் பி.டெக். பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும், படித்து முடித்துவிட்டு, மும்பையில் வேலையிலும் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.. அதன் பிறகு அவர் புரிக்கு வந்து பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினரை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!