Viral
’மெக்காவை இடித்து ராமர் கோவில்’ : சவூதியில் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசிய இந்திய சங்கிக்கு சிறை !
மதச்சார்பற்ற நாடாக விளங்கி வரும் இந்தியாவை இந்துராஷ்ட்ராவாக மாற்ற முயலும் செயல்களில் BJP, RSS தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினர்களை ஒதுக்கிவிட்டு இந்தியாவை இந்து நாடாக மாற்றும் விதமாக பல்வேறு சட்டவிரோத செயல்களையும், சட்டங்களையும் மாற்றியமைத்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு.
இதற்கு நாடெங்கும் எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும் பா.ஜ.க.,வின் செயல்பாடுகள் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சவூதியில் உள்ள தம்மம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வரும் கர்நாடகா குந்தாப்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பங்கேரா என்ற நபர், இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்கும் மெக்கா காபாவை இழிவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கடந்த டிசம்பர் 21ம் தேதி பதிவிட்டிருந்தார்.
அதில், “இந்து அன்பர்களே அடுத்த ராமர் கோவில் மெக்காவில்தான். அதற்கு தயாராகுங்கள். ஜெய் ஸ்ரீராம். மோடி நம்முடன் இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். ஹரிஷ் பங்கேராவின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்தும், விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.
அதேபோல், சவூதி மன்னர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் ஹரிஷ் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிழைக்கப் போன இடத்தில், அதுவும் முஸ்லிம் நாட்டில் இதுபோன்ற பதிவிட்டு மெக்காவை இழிவுபடுத்தியது தொடர்பாக சவூதி தம்மம் போலிஸாருக்கு புகாரளிக்கப்பட்டதை அடுத்து ஹரிஷ் பங்கேரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக ஹரிஷ் பங்கேரா பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, அவரின் ஒப்பந்தத்தையும் நீக்கி உள்ளதாக அவர் பணிபுரிந்து வந்த Gulf Carton Factory Co நிறுவன பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹரிஷ் பங்கேராவின் ஃபேஸ்புக் கணக்கை சவூதி போலிஸார் முடக்கியுள்ளனர். இருப்பினும், ஹரிஷின் மெக்கா குறித்த சர்ச்சை பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு மக்களை மத ரீதியாக பிரித்து வெறுப்பு அரசியலை தேடும் பா.ஜ.க.,வினருக்கு மற்ற நாடுகளில் உள்ள இந்துக்களும் இதே போன்று துன்புறுத்தல்களை அனுபவிக்கமாட்டார்களா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !