Viral
“புத்தகம் படித்தால் ஹேர் கட் ஆஃபர்” - தூத்துக்குடியில் அறிவுப்பசி ஊட்டும் சலூன் ! (வீடியோ)
சலூன் கடைகளில் பெரும்பாலும் டி.வியில் பாடல்களோ, செய்தி சேனல்களோ ஓடிக்கொண்டிருக்கும். அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவது வழக்கமாக இருக்கும்.
ஆனால் தூத்துக்குடியில் உள்ள முடித் திருத்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பசி ஊட்டும் வகையிலும், புத்தக வாசிப்பை ஏற்படுத்தவும் கடையின் அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார் அதன் உரிமையாளர் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பனின் இந்தச் செயலுக்கு தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், தனது கடையில் இருந்து புத்தகங்களை எடுத்தும் வெறும் 10 பக்கங்களை படித்தால் கூட முடித் திருத்தும் கட்டணத்தில் சலுகை அளித்து அசத்துகிறார் கடையின் உரிமையாளர்.
சலூன் கடையில் இலக்கியம், சிறுகதை என அனைத்து விதமான புத்தகங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார். இதனால் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் நூலகங்களில் இருப்பது போலவே புத்தகங்களை படித்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்