Viral
சர்க்கரை நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் சொல்லும் உணவு வழிமுறை!
சர்க்கரை நோயாளிகளின் உணவு முறை பற்றி நிறைய கேட்டிருப்போம். சித்த மருத்துவம் என்ன சொல்கிறது எனப் பார்க்கலாம். அரிசியே வேண்டாம் என எந்த மருத்துவ முறையும் சொல்லவில்லை. அரிசி அளவை குறைக்க சொல்கிறது. அதனுடன் காய்கறி அளவை அதிகரிக்க அறிவுறுத்துகிறது.
கிழங்கு வகைகளைத் தவிர்க்க சொல்கிறது. காரணம், குளுக்கோஸின் அளவை விரைவாக அதிகரிக்க செய்வதால் தான், புரத சத்துகள் நிறைந்த முளைகட்டிய தானிய வகைகளை சாப்பிட்டு வர பயன் தரும்.
தினமும் ஒரு கப் சாப்பிட்டு வர சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியம் மேம்படும். டீ, காபியில் வெள்ளை சர்க்கரை, தேன், வெல்லம் சேர்க்க கூடாது. சுகர் ஃப்ரீ என்று சொல்லப்படும் சர்க்கரையும் தவிர்க்க வேண்டும்.
கொய்யா, ஆப்பிள், பப்பாளி, நெல்லி, ஆரஞ்சு, அத்தி போன்றவற்றை அளவோடு சாப்பிடலாம். மா, பலா, வாழையை சிறிதளவு சுவைக்கலாம். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிறுதானியங்கள் சிறப்பானவை.
உடலில் செல்லும் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை சத்தை மெதுவாக வெளியிடும் தன்மை இருப்பதால் தினமும் ஒரு சிறுதானிய வகையில் செய்த உணவை சாப்பிடலாம்.
ஆவாரைக் குடிநீர் சூரணம், சீந்தில் சூரணம், திரிபலா சூரணம், சிறுகுறிஞ்சான் பொடி, நாவல் கொட்டை சூரணம், மதுமேக சூரணம் ஆகியவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கூடுதலாக, தியானம், நடைபயிற்சி, யோகா செய்துவர சர்க்கரை நோயால் வரும் மற்ற பாதிப்புகளும் தவிர்க்கப்படும்.
- ப்ரீத்தி
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?