Viral

‘ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் கால்பதித்த நோக்கியா’: JBL சவுண்ட் Dolby Atmos என அசத்தும் சிறப்பம்சங்கள்! 

டெக்னாலஜி உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சாதனங்கள் சந்தையில் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. அதேபோல், ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களும் தங்களது தரங்களை மாற்றிக்கொண்டே வருகிறது. அவ்வகையில், ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் செல்போன்களை மட்டும் தயாரிக்காமல் டிவிக்களை விற்பனை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது.

அதில், தற்போது ஜியோமி, மோட்டோரோலா போன்ற ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களின் டிவிக்கள் சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக பிரபலமான நோக்கியா நிறுவனமும் ஆண்ட்ராய் ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்புக்கு பிறகு, டிவி தயாரிப்பதில் இறங்கியுள்ளது. அந்த ஸ்மார்ட் டிவி முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

நோக்கியா ஸ்மார்ட் டிவியின் மிகச்சிறந்த அம்சமாக சவுண்ட் தரம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட் டிவி ஜேபிஎல் நிறுவனத்துடன் இணைந்து சவுண்ட் தரத்தை மேம்படுத்தியுள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் மற்றும் டி.டி.எஸ் Tru Surround Sound அம்சத்தையும் கொண்டுள்ளது.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், நோக்கியா ஸ்மார்ட் டிவி குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் லீக்கானது குறிப்பிடத்தக்கது. 50 இன்ச்க்கு மேல் நோக்கியா டிவி டிஸ்ப்ளே இருக்கலாம் என்றும் அது 4K UHD Resolution உடன் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் வசதியை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மோட்டோரோலாவின் ஸ்மார்ட் டிவி ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு விடப்பட்ட அமோக வரவேற்பை பெற்று வருகிறது. டிசம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள நோக்கியா ஸ்மார்ட் டிவி ஃபிளிப்கார்ட்டில் விற்பனையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.