Viral
உங்கள் கைரேகை இருந்தால் தான் இனி வாட்ஸ்அப் திறக்கும்... ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வந்தது அப்டேட்!
பயனாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்தே பல்வேறு வசதிகளைப் புகுத்தி வருகிறது. அந்த வரிசையில் பயனாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஓஎஸ் போன்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு வசதி, நேற்று முதல் ஆண்ட்ராய்டு போன்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது பயனாளர்களுக்கு மற்றொரு பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்கள் போனில் இருக்கும் செயலியை அப்கிரேட் செய்தால் கைரேகை பாதுகாப்பு வசதியைப் பெறலாம். கைரேகை உள்நுழைவு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான செயல்முறை கீழே :
Tap Settings > go to Account > Privacy > Fingerprint Lock > Turn on Unlock with fingerprint > confirm your fingerprint.
இந்த வசதி, வாட்ஸ்அப்பை வேறு யாரேனும் பயன்படுத்துவதை தடுத்து கூடுதல் பாதுகாப்பளிக்கும் என்பதால், பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!