Viral
இறந்துபோன தந்தையின் மொபைல்போனில் வந்த ‘இன்ப அதிர்ச்சி’ தகவல்: நெகிழ்ந்து போன மகள் - வைரல் பதிவு!
வாழ்வின் நெருக்கமான உறவுகளை பிரியும் போதுதான், அந்த உறவுகளின் உயிர் பிரியும் போதுதான் அவர்கள் இல்லாத வெற்றிடமும், அவர்களின் அருமையும் தெரிய வரும்.
அதுபோலதான், அமெரிக்காவில் உள்ள 23 வயது பெண்ணுக்கு தனது தந்தையில் இழப்பு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருந்திருக்கிறது. அதனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தையின் தொலைபேசி எண்ணுக்கு நாள்தோறும் தன் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறுஞ்செய்தியாக அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார் சாஸ்டிட்டி பேட்டர்சன் என்ற அந்தப்பெண்.
இவ்வாறு தொடர்ச்சியாகத் தன்னுடைய அழுகை, பாசம், கோபம் என்பதான உணர்ச்சிகளை குறுஞ்செய்திகள் மூலம் அந்த எண்ணுக்கு அனுப்பி தெரிவித்து வந்துள்ளார். அப்படியாக ஒருநாள் தந்தையின் 4வது ஆண்டு நினைவு தினத்தின் முந்தைய நாளன்றும் உருக்கமான பதிவை தனது தந்தையின் எண்ணுக்கு சாஸ்டிட்டி அனுப்பியுள்ளார்.
அதில், “நாளை மீண்டும் ஒரு கடினமான நாள். உங்களை இழந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன். உங்களை இழந்து மிகவும் தவிக்கிறேன். நீங்கள் என்னை எதிர்ப்பார்த்தபோது உங்களுடன் இல்லாததற்கு மன்னித்து விடுங்கள்.” என அவரது பதிவு நீள்கிறது.
அதனையடுத்து, வழக்கம் போல் பணியை பார்த்துக் கொண்டிருந்த சாஸ்டிட்டிக்கு தனது தந்தையின் பழைய எண்ணுக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வந்துள்ளது. அதுவும் 4 ஆண்டுகள் கழித்து. இதனை கண்டதும் சாஸ்டிட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு தனது குறுஞ்செய்திக்கு வந்த பதிலை படித்துள்ளார்.
அதில், ஹாய் ஸ்வீட் ஹார்ட், நான் உன் அப்பா இல்லை. ஆனால் உன்னிடம் இருந்து 4 ஆண்டுகளாக குறுஞ்செய்தியை கிடைக்கப் பெறுகின்றேன். மேலும் நாள்தோறும் காலையும் இரவும் உன்னுடைய மெசேஜ்ஜுக்காகவும் காத்திருந்தேன். நான் பிராட். கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு கார் விபத்தில் என்னுடைய மகள் உயிரிழந்துவிட்டாள். அதன் பிறகு உன்னுடைய குறுஞ்செய்திகள்தான் என்னை உயிருடன் வாழ வைத்து வருகிறது.
உன்னுடைய நிகழ்வுகளை மெசேஜாக அனுப்பும் போதெல்லாம் அது கடவுளிடம் இருந்து வருவதாகவே எண்ணிக்கொள்வேன். பதில் அனுப்ப வேண்டும் என எண்ணுவேன். ஆனால், உன்னிடம் ஏதும் சொல்லி காயப்படுத்த விரும்பவில்லை. மற்ற எல்லாரையும் விட உன்னுடைய வளர்ச்சிகளை நான் கண்டுள்ளேன். என் மகள் உயிருடன் இருந்திருந்தால் உன்னை போலவே இருக்கவேண்டும் என விரும்பியிருப்பேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பிறகு அந்த உரையாடலை எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சாஸ்டிட்டி, நான்கு ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வெடுக்க வேண்டியதற்கான அறிகுறியாக இதை கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பலர் அதனை பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேலானோர் ஷேர் செய்துள்ளனர். பலர் சாஸ்டிட்டிக்கு ஆறுதலாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.
அதனையடுத்து, தன்னுடையை பதிவை ஷேர் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார் சாஸ்டிட்டி.
இந்த அளவுக்கு என்னுடைய குறுஞ்செய்தி பிரபலமடையும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. மேலும் இதனை பகிர்வதன் மூலம் நான் பிரபலமடைவேன் என்பதற்காக செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் உலகில் யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை, அன்பு எல்லா இடத்திலும் இருக்கிறது என்பது உண்மை ஆகி இருக்கிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?