Viral
இந்தியாவில் பிளாஸ்டிக் இல்லாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா? - ‘லாச்சுங்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிய அளவில் குறைக்கவேண்டும் என எண்ணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும் நாடுமுழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாமல் அரசும் தன்னார்வலர்களும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய நாட்டில் ஒருமாநிலத்தில் உள்ள கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாடே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒருகிராம் உள்ளது. அந்த கிராமத்தில் சுற்றுலா வருவோரின் வாகனத்தை எல்லையில் வழி மறைத்து கிராம மக்களே சோதனை செய்வார்களாம்.
அப்படி சோதனையின் போது பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் அனுமதி மறுத்துவிடுவார்களாம். ஒருவேலை இல்லை என்றால் சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டு வாழ்த்தி அனுப்பி வைப்பார்கள் என்றுக் கூறப்படுகிறது.
கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா? சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மலை கிராமமான லாச்சுங் தான் அது.
லாச்சுங் கிராம மக்கள் அனைவருமே முழுமையான பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. லாச்சுங் கிராமம் சிக்கிம் மாநிலத்தின் சிறந்த சுற்றுலா இடம் எனக் கூறப்படுகிறது. லாச்சுங் கிராமத்தில் பசும்புல்வெளிகள், அழகிய குன்றுகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் போன்றவை இருப்பதாலே அதிகமாக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, இந்த ஊருக்கான தனிச்சிறப்பே பிளாஸ்டிக் தடை என்பது தான். குறிப்பாக விலைக்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை ஊருக்குள் எடுத்துச் செல்ல முடியாது. அதையும் மீறி எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம். அதுதவிர, எந்த வகையான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் அனுமதியில்லை. அதனால்தான், இன்று இந்தியாவில் பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத ஒரே கிராமமாக மிளிர்கிறது லாச்சுங்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!