Viral

மாணவர்களுக்காக டிக்டாக் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் Edutok!

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் இளைஞர்களை மட்டுமின்றி வயது பாரபட்சமில்லாமல் அனைவர் மத்தியில் பிரபலமடைந்து உள்ளது டிக்-டாக் செயலி. இந்த செயலி மூலம் பாட்டு பாடியும், நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்பட்டு வந்த டிக்டாக் செயலி இனி அறிவுசார்ந்த செயல்பாட்டுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்று அதன் தலைமை செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் எஜூடோக் (Edutok) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேலான வீடியோக்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக எஜூடோக் பிரிவின் தலைமைச் செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக ஜோஷ் டாக்ஸ், தி நட்ஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் டிக்டாக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.