Viral
Foodies விரும்பும் சுகாதாரமான வெரைட்டி ரைஸ்... அரை கிலோ வெறும் ரூ.33 தான் : தேனியில் விற்பனை ஜோர்!
நட்சத்திர ஓட்டல்கள் எத்தனை எத்தனை வந்தாலும், தெருவோரம் தள்ளுவண்டிகளில் வைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களுக்கான மவுசு என்றும் குறைவதே இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார் ‘வெரைட்டி ரைஸ்’ ஜெயபாண்டி.
இவர், தேனி காவல் நிலையம் எதிரே கடந்த 28 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் வைத்து வெரைட்டி ரைஸ் விற்பனை செய்து வருகிறார். தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், மிளகு, தயிர், சாம்பார் சாதம், முட்டை பிரியாணி மற்றும் குழம்பு, துவையல், ஊறுகாய் என விற்பனை செய்து வருகிறார்.
சுகாதாரமான முறையில், அரசு அதிகாரிகளின் தர பரிந்துரையின் பேரில் வாங்கப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து வெரைட்டி ரைஸை விற்று வருகிறார் ஜெயபாண்டி.
அரை கிலோ வெரைட்டி ரைஸ் 33 ரூபாயும், டப்பாவுக்கு 7 ரூபாயும் தனது வாடிக்கையாளரிடம் வசூலிக்கிறார். காலை 10 மணிக்கு வியாபாரம் தொடங்கினால் மதியம் 1.30 மணிக்கெல்லாம் அனைத்து உணவுகளையும் விற்றுத் தீர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார். காவல் நிலையத்துக்கு எதிரேயே கடை போட்டிருப்பதால், அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் என பலர் ஜெயபாண்டியின் உணவை வாங்கி ருசித்து உண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பேசியுள்ள ஜெயபாண்டி, 28 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வியாபாரம் செய்து வருவதாகவும், தொடக்கக் காலத்தில் வாழை இலையை மட்டுமே உணவு பேக்கிங் செய்ய பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இதனாலேயே தான் விற்கும் உணவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பீடு இருந்ததாகவும் தெரிவித்தார்.
காலப்போக்கில் வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என முடிவெடுத்து சுகாதாரப் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் பரிந்துரைக்கப்பட்ட டப்பாக்களில் வைத்து உணவுகளை விற்று வருகிறேம். தற்போது இந்த முறைக்கும் வாடிக்கையாளர்கள் வரவேற்பளித்து வருகின்றனர்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஜெயபாண்டி.
ஆகவே, இனி யாரேனும் தேனி பக்கம் செல்ல நேர்ந்தால் ஜெயபாண்டியின் அரை கிலோ வெரைட்டி ரைஸை ஒரு கை பார்க்காமல் திரும்பிவிடக் கூடாது என்ற மன நிலையையே ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், ருசியான உணவுகளை தேடித்தேடி சென்று சாப்பிடும் உணவு பிரியர்களுக்கு ஏற்ற சுகாதாரமான உணவுக்கு ஜெயபாண்டியின் வெரைட்டி ரைஸ் உத்தரவாதம் அளிப்பதாக, அவரது வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!