Viral
யார் இந்த பெண்? ஏன் மழை வெள்ளத்தில் ’கவர்ச்சி’ போஸ் கொடுக்கிறார் - வைரலாகும் படங்களின் பின்னணி என்ன ?
பீகார் தலைநகர் பாட்னாவில் கடுமையான மழையின் காரணமாக தெருக்களில் வெள்ளநீர் ஓடி வருகிறது. பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூழ்கியும், மரங்கள் விழுந்தும், பல்வேறு தாழ்வான பகுதிகளில் வீடுகளில் இடிந்தும் உள்ளன.
இந்தநிலையில் வெள்ளநீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் பாட்னா நகர வீதிகளில் மெருன் கலர் கலக்கல் ஆடையணிந்து ஒரு பெண் ஒருவர் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாட்னா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அதிதி சிங் என்ற அந்த மாணவியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு சோகமான தருணத்தில் இந்த மாணவி இப்படி வெள்ளநீரில் ஆட்டம் போட்டு போஸ் கொடுத்திருப்பது கொடுமையானது என கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
மாணவி அதிதி சிங் புகைப்படங்களை எடுத்து, அதனை இணையத்தில் உலவவிட்ட புகைப்படக்கலைஞர் சவுரவ், நகரத்தின் துயரத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்களை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ், "பீகார் வெள்ளம் குறித்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதே இந்த படப்பிடிப்புக்கு பின்னால் இருந்தது. மற்ற மாநிலங்களில் வெள்ளம் வரும்போது, நாடு முழுவதிலுமிருந்து மக்கள் உதவ முன்வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் வெள்ளத்தின் ஒரு சாதாரண படத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டால், மக்கள் அதைப் பார்க்கிறார்கள், 'மிகவும் வருத்தமாக' கருத்துத் தெரிவித்துக் கொள்கிறார்கள். ஆனால், மக்கள் வெள்ள சேதத்தை அறிந்துகொள்ளும் வகையில் அவர்கள் இந்த படங்களைப் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பினேன், எனவே நான் இதுபோன்ற புகைப்படங்களை எடுத்தேன்" என்று தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த கல்லூரி மாணவி அதிதி சிங், போட்டோஷூட்டின் நோக்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கேலி செய்வது அல்ல என்று என்று தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை புகைப்படக்கலைஞர் சவுரவ், மாணவி அதிதி சிங் ஆகியோர் நிரூபித்துள்ளனர். பீகார் வெள்ளச்சேதம் இப்போது இந்த புகைப்படங்கள் மூலம் அனைவரின் பார்வையிலும் பதிந்துள்ளது என்பதே உண்மை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!