Viral
விற்பனைக்கு வரும் பிரபல தொழிலதிபரின் முதல் கார்... விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் மிக மூத்த கோடீஸ்வரர்களில் ஒருவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவுக்கு சொந்தமாக ஏராளமான தொழில்கள் இருந்தாலும், டாடா என்றதும் அனைவருக்கும் சட்டெனெ நினைவுக்கு வருவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான்.
ஆட்டோமொபைல் துறையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே ஏற்படுத்திக் கொண்டவர் ரத்தன் டாடா. இந்திய வாகன உலகின் ஜாம்பாவானாக திகழ்ந்து வருபவர் ரத்தன் டாடா. தற்காலத்தில் எத்தனையோ கார்கள் போட்டிக்கு இருந்தாலும், டாடா கார்கள் பலருக்கும் ஆதர்சம்.
டாடா மோட்டார்ஸ் மூலம் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை உலகளவில் பெருமைக்குரிய அந்தஸ்தை பெற்றுள்ளதற்கு ரத்தன் டாடாவே முதல் முதற் காரணமாக உள்ளார். அண்மையில், தரமான வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.
அதில், பல முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் 5வது இடத்தையும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கான பட்டியலில் 31வது இடத்தையும் பிடித்து இன்றளவும் பெருமையை தக்கவைத்திருக்கிறது ரத்தன் டாடாவின் நிறுவனம்.
இந்த நிலையில், தான் மிகவும் விருப்பப்பட்டு முதன்முதலில் வாங்கிய ப்யூக் ஸ்கைலார்க் செடான் காரை தற்போது விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார் ரத்தன் டாடா. 1978ம் ஆண்டு காலத்து விண்டேஜ் ரக மாடலான இந்த கார் துளிகூட மாறாமல் புதிதாக வாங்கியது போலவே காட்சியளிக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த கார் வலதுபுற ஸ்டீயரிங் கொண்டது. நிறம், ஸ்டிக்கர், முத்திரை போன்ற எந்த அம்சங்களிலும் ஒரு கீறல் கூட விழாமல் பொக்கிஷம் போன்று இதனை அவ்வளவு அழகாக ரத்தன் டாடா பராமரித்துள்ளதால் ப்யூக் ஸ்கைலார்க் காருக்கு விலையாக ரூ.14 லட்சம் கோரப்பட்டுள்ளது.
இந்த ப்யூக் ஸ்கைலார்க் காரின் சிறப்பம்சம் என்னவெனில், 1978ம் ஆண்டு காலகட்டத்தில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட 17,116 கார்களில் ஒன்று இந்தியாவின் ரத்தன் டாடாவிடம் இருந்தது.
வி8 எஞ்சின் மாடல் கொண்ட ப்யூக் ஸ்கைலார்க் கார்கள் மூன்று வகையான தேர்வுகளில் விற்கப்படுகிறது. அதில், 5.8 லிட்டர் கொள்ளளவு கொண்டதில் 145 பிஎச்பி பவரும், 332 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே கொள்ளளவில் 155 பிஎச்பி பவரும், 380 என்எம் டார்க் திறனையும், 5.7 லிட்டர் கொள்ளளவு கொண்டதில் 170 பிஎச்பி பவரும், 373 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
ஃபெராரி கலிஃபோர்னியா, லேண்ட் ரோவர் ஃப்ரீ லேண்டர், பென்ஸ் 500 எஸ்எல், பென்ஸ் டபுள்யூ 124, கிறிஸ்லர் செப்ரிங், பென்ஸ் எஸ் கிளாஸ், கடிலோக் எக்ஸ்எல்ஆர், ப்யூக் சூப்பர் 8 ஆகிய அதி நவீன கார்களை ரத்தன் டாடா வைத்துள்ளார். இருப்பினும், டாடாவுக்கு மிகவும் பிடித்தமான ப்யூக் ஸ்கைலார்க் காரை யார் தற்போது வைத்திருப்பது என்பதும், அதனை விற்பனை செய்வதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!