Viral
எகிறும் வெங்காய விலை : குறைந்த விலையில் விற்கும் டெல்லி அரசு - வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் மக்கள்
நம் அன்றாட சமையலுக்கு வெங்காயம் இன்றியமையாதது ஆகும். ஆனால், கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை சில நாட்களாக கடுமையாக அதிகரித்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தவே அஞ்சுகின்றனர்.
இந்தியாவில் வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது.
இதனால் அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. இதனால் வெங்காயத்தின் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்து விலையில் மக்களுக்கு வழங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அரசு வாகனங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயங்கள் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயம் வாங்கி வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!