Viral

வேற லெவல் கேமரா, செல்ஃபியுடன் ஸ்லோஃபி, ஆப்பிள் டிவி என அசாத்திய அம்சங்களுடன் அறிமுகமானது ஐபோன் 11 சீரிஸ்!

சாம்சங், ஒன் ப்ளஸ், நோக்கியா, விவோ, ரெட்மி என பல்வேறு ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஆப்பிளின் ஐஃபோன் மீதான மவுசும், எதிர்ப்பார்ப்பும் இன்றளவும் குறையாமலேயே உள்ளது.

அந்த வகையில், உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோனின் 11வது சீரிஸ் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் அறிமுக விழா நடைபெற்றது.

அப்போது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய பெயர்களில் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஐபோன் 10 சீரிஸை விட 11 சீரிஸ் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக செல்ஃபி போல் ஸ்லோஃபி என்ற அம்சத்தை 11 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளடக்கியுள்ளது.

முழுக்க முழுக்க ஐஃபோன் 11 சீரிஸ் கேமிராவின் மீது கவனம் செலுத்தி உருவாக்கியுள்ளது ஆப்பிள். முந்தைய எக்ஸ் ஆர் மாடலை விட ஐஃபோன் 11 மாடல்களின் விலை குறைவுதான். இந்த மாடல் மொபைல்கள் 4K தரத்தில் வீடியோக்களை எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 11, 6 கலர்களிலும், ஐபோன் 11 ப்ரோ & 11 ப்ரோ மேக்ஸ் 3 கலர்களிலும் உருவாகியுள்ளது.

iphone 11

இரண்டு ரியர் கேமிராக்களை கொண்டுள்ள ஐபோன் 11 ஒரு அல்ட்ராவைட் ஆங்கில் லென்ஸும், 120 டிகிரியை படம் பிடிக்கும் அளவுள்ள லென்ஸும் உள்ளது. மேலும் செல்ஃபி கேமிராவில் நைட் மோட், எச்.டி.ஆர் உள்ளிட்ட ஏராளமான வசதியை கொண்டுள்ளது. 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் ஏ13 என்ற சிப் பொருத்தப்பட்டுள்ளதால் அதிவேகமாக செயல்படும் என்றும், ஹேங் ஆவதற்கான எந்த சாத்தியக்கூறும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ மேக்ஸ் சீரிஸ் மொபைல் போனில் ஒரு அல்ட்ரா வைட் ஆங்கிள், 120 டிகிரி ஆங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ ஆங்கிள் என 3 கேமிராக்கள் உள்ளன. ஐபோன் 11 போன்று இதிலும் ஏ13 சிப், நைட் மோட், எச்டிஆர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதேபோல், இந்த மாடல் போன்களில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 13 மணிநேரம் உபயோகிக்கலாம்.

Night Mode

ஐபோன்களிலேயே மிக நீண்ட நேரம் பேட்டரி ஆயுள் கொண்டது ஐபோன் 11 சீரிஸ். இரண்டு சிம், டால்பி அட்மோஸ், ஃபேஸ் ஐடி, வாட்டர் ரெஸிஸ்டண்ட் என பல அம்சங்களை இந்த மாடல் செல்ஃபோன்கள் கொண்டுள்ளது.

ஐபோன் 11 சீரிஸ் மாடல் போன்களின் விலை விவரங்கள் பின்வருமாறு:

ஐபோன் 11:

64 GB - ரூ.64,900

128 GB - ரூ.69,900

256 GB - 79,900

Slo-mo

ஐபோன் 11 ப்ரோ:

64 GB - ரூ.99,900

128 GB - ரூ.1,13,900

256 GB - ரூ. 1,31,900

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்:

64 GB - ரூ.1,09,900

128 GB - ரூ.1,23,900

256 GB - ரூ.1,41,900

iphone 11

11 சீரிஸ் போன்களுடன், 10 இன்ச் உள்ள ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக்புக் உள்ளிட்டவற்றையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 11 சீரிஸ் போன்கள் வருகிற செப்.,27ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஆப்பிள் பயனாளர்களுக்கென நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு பதில் ஆப்பிள் டிவி பிளஸ் என்ற பிரத்யேக சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 4.99 டாலர் மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும்.

iphone 11 pro & iphone 11 pro max

மேலும், புதிதாக ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கினல் ஓராண்டுக்கான ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை இலவசமாக பெறலாம். ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை நவம்பர் 1ம் தேதி முதல் 100 நாடுகளில் தொடங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.