Viral
3 வருடங்களாக இளைஞரைத் துரத்தும் காக்கைகள் : காக்கைகளுக்கு பழிவாங்கும் திறன் இருக்கிறதா? - ஆச்சரிய தகவல்!
மத்திய பிரதேச மாநிலத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சுலோ கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த 2017ம் ஆண்டு வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மரத்தில் இருந்து கீழே விழுந்த காக்கைக் குஞ்சு ஒன்று உயிருக்குப் போராடியுள்ளது.
அதனை சாலையில் இருந்து மீட்டு முதலுதவி செய்ய முயன்றுள்ளார் சிவா . அப்போது காக்கைக் குஞ்சு எதிர்பாராத விதமாக சிவா கையில் இருக்கும்போதே உயிரிழந்தது. இதனையடுத்து அந்தக் காக்கையை மரத்தின் அடியில் வைக்கச் சென்றபோது அங்கிருந்த காக்கைக் கூட்டம் சிவா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளன.
சிவா தான் காக்கை குஞ்சைக் கொன்றுவிட்டதாக நினைத்த காக்கைகள் தினமும் அவரை விடாமல் துரத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கடந்த மூன்று வருடங்களாக நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. சிவா வீட்டில் இருந்து கிளம்பும்போது கையில் ஒரு தடியுடன் செல்வதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இதுகுறித்து சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நான் உதவி செய்வதற்குத் தான் அந்த காக்கைக் குஞ்சை எடுத்தேன். ஆனால், மோசமான நிலையில் இருந்த காக்கை சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டது.
என் கையில் அந்தக் காக்கை இருந்ததால் அதனை நான்தான் கொன்றுவிட்டதாக காக்கைகள் நினைத்திருக்கலாம். தினமும் என்னை பழி வாங்க நினைக்கிறது. அதனால் தற்போது கையில் குச்சியுடன் தான் வெளியில் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பறவைகள் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “காக்கைகள் பொதுவாக புத்திக்கூர்மை கொண்டவை. மனிதர்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக்கொள்ளும். அவற்றை யாரேனும் துன்புறுத்தினால் அதனை நினைவில் வைத்து பழி வாங்கும். அந்தத் திறன் காக்கைகளுக்கு உண்டு” எனக் கூறியுள்ளார்.
காக்கைகள் மனிதனை பழிவாங்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவா மீது ஆரம்பத்தில் பரிதாபப்பட்டவர்கள் கூட, தற்போது வாடிக்கை நிகழ்வை வேடிக்கையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?