Viral
மாரிதாஸின் பொய்கள் : வலதுசாரி புரட்டுகளை வெச்சு செய்யும் யூ-ட்யூப் சேனல்!
ஒரு தேர்ந்த அரசியல் ஞானி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, பொய்களை அவிழ்த்துவிட்டு வரும் மாரிதாஸ் என்பவர், தி.மு.க பற்றியும், திராவிடக் கட்சிகளின் ஆட்சி பற்றியும், முற்றிலும் தவறான கருத்துகளை வீடியோக்களின் மூலம் கூறி வருகிறார்.
பெரிய டிஜிட்டல் திரை ஒன்றில் பவர் பாயிண்ட் காட்சிகளை ஓடவிட்டு அதை விளக்குவதாகக் கூறி முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகிறார் மாரிதாஸ். அவரைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கானோரும் அவர் சொல்வதை உண்மை என நம்புவதுதான் இப்போது மிகப்பெரிய சிக்கல்.
காஷ்மீர் விவகாரத்தில், காஷ்மீரிகளின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் தி.மு.க பா.ஜ.க அரசின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தது.
இதையொட்டி, மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ பதிவில், தி.மு.க-வுக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக, தன் மனதுக்குத் தோன்றியதையெல்லாம் உளறிக்கொட்டியிருந்தார் மாரிதாஸ்.
இதையடுத்து, திட்டமிட்டு அவதூறு பரப்பி, மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, பகைமையை ஊக்குவிக்கும் விதமாகவும், மதங்களுக்கிடையேயான வன்முறைகளைத் தூண்டும் விதமாகவும் பேசி வருவதாக மாரிதாஸ் மீது தி.மு.க சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரிதாஸ் அள்ளித்தூவும் பொய் புரட்டுகளை அம்பலப்படுத்தும் விதமாக ‘செய்கை தொடரும்’ எனும் யூ-ட்யூப் சேனல் செயல்பட்டு வருகிறது. மாரிதாஸ் தொடர்ந்து வெளியிட்டு வரும் புரட்டுகளை ஆதாரப்பூர்வமாக மிக எளிமையான முறையில் விளக்குகிறது இந்த யூ-ட்யூப் சேனலின் காணொளிகள்.
புதிய கல்விக்கொள்கையின் திட்டங்களைத் திணிப்பதற்காக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சமச்சீர் கல்வியை குறைகூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் மாரிதாஸ். அதிலும் ஏகப்பட்ட புரட்டுகள். அதுகுறித்த உண்மைகளையும் விளக்கியிருக்கிறது ‘செய்கை தொடரும்’ யூ-ட்யூப் சேனல்.
திராவிட ஆட்சியைக் குறை கூறி, பா.ஜ.க-வின் இந்துத்வ சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், மதங்களுக்கிடையேயான பிரிவினையை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள மாரிதாஸுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!