Viral

முடி உதிர்வு குறித்து கவலைப்படுகிறீர்களா? இந்த 2 விஷயங்களை சரி செய்யுங்கள் போதும்!

முடி உதிர பல காரணங்கள் உள்ளன. ஆனால், முக்கிய காரணமாகவும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட காரணமாக இருப்பது இரண்டு உண்டு. அவை உடல் சூடும் மன அழுத்தமும் தான்.

உடல் சூட்டால் முடி உதிரும், மன அழுத்த பிரச்சனையும் ஏற்படும். உடல் சூட்டைக் குறைத்து முடி உதிர்வை தடுத்து, முடி வளர வழி என்ன எனப் பார்க்கலாம். பெண்கள் செவ்வாய், வெள்ளியன்று எண்ணெய்த் தேய்த்து குளிப்பது, ஆண்கள் புதன், சனியன்று எண்ணெய் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். முடி உதிர்வு நிற்கும். உள்ளங்கை, உள்ளங்காலில் மருதாணி வைப்பதும் உடல் சூட்டைக் குறைக்கும்.

வாரம் ஒருமுறை நெல்லி முள்ளியை, அதிகம் புளிக்காத தயிரில் ஊறவைத்து அரைக்கவும். இதை தலையில் ஹேர் பேக்காக போட்டு, 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம். உடல் சூடு தணியும். மனஅழுத்தம் நீங்கும். முடி உதிர்வு பிரச்சனை நிற்கும். சோற்று கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை எடுத்து அரைத்து, இரண்டையும் நன்றாக கலக்கவும். இதை கூந்தலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்திட உடல் சூடு தணிந்து முடி வளரும்.

கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து, மூன்றையும் அரைத்து, சிறு சிறு தட்டைகளாக தட்டி வெயிலில் காயவைக்கவும். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயை தினமும் தடவி, 50 முறை சீப்பால் வாரி ஒரு மணி கழித்து குளித்து வர முடி கருமையாக வளரும்.

கற்றாழை லேகியம், வெண்பூசணி லேகியம், கற்றாழை ஜூஸ், நீர் மோர், பாதாம் பிஸின், சப்ஜா விதை, வெள்ளரி விதை, தர்பூசணி விதை, சுரைக்காய் விதை ஆகியவை உடல் சூட்டைக் குறைக்கும். இதனால் முடி உதிர்வு நிற்கும்.

மன அழுத்தம் நீங்கிட சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம். வாழைப்பழம், டார்க் சாக்லேட், முட்டை, பாதாம், வால்நட், விதைகள், கேரட், ஈரல், கீரைகள், உலர் அத்தி, மாம்பழம், கொய்யா, மீன், மாதுளை போன்றவை சாப்பிட மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.

இவற்றை பின்பற்றுங்கள், உடல் சூடும், மன அழுத்தமும் குறையும். முடி உதிரல் நிற்கும்.

முடி உதிர்வு குறித்து மேலும் டிப்ஸ்களை தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.