Viral
பூமராங் வீடியோ, டார்க் மோட் : புதிய அப்டேட்டுகளோடு அசத்தும் வாட்ஸ் அப் ! இன்னும் என்னென்ன வசதிகள் ?
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொடர்பில் முக்கிய அங்கமாக உள்ளது வாட்ஸ் ஆப் செயலி.
இது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் இயங்குதளத்தில் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் பயனர்களைக் கவரும் விதமாக அடிக்கடி பல்வேறு அப்டேட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பூமராங், டார்க் மோட், மல்டி பிளாட்ஃபார்ம், மெமோஜி, பே சர்வீஸ் ஆகிய புதிய அப்டேட்களை வாட்ஸ் அப்பில் கொண்டுவர உள்ளது. இந்த புதிய அப்டேட்கள் முதலில் ஐஃபோனின் iOS இயங்குதளத்துக்கு கொடுக்கப்பட்ட பின்னர் ஆண்ட்ராய்டுகளுக்கும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமராங்: இன்ஸ்டாகிராமில் பூமராங் மோட் அனைவராலும் ஈர்க்கப்பட்ட வசதி. சில விநாடிக்குள் வீடியோ எடுத்து ஸ்டேட்டஸாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு இன்ஸ்டா பயனாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள நிலையில், தற்போது வாட்ஸ் அப்பிலும் பூமராங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 7 விநாடிக்குள் வீடியோ எடுத்து, மெசேஜாகவும், ஸ்டேட்டஸாகவும் வைத்துக்கொள்ளலாம்.
டார்க் மோட்: வாட்ஸ் அப் பயனாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் என்றால் அது டார்க் மோட் தான். ஏற்கெனவே, ட்விட்டர், ஃபேஸ் புக் மெசேஞ்சர் போன்ற பல சமூக வலைதளங்களுக்கு டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, வாட்ஸ் அப்பிலும் டார்க் மோட் வர போகிறது.
மெமோஜி: இமோஜிக்களை அனிமேஷன் செய்து மெமோஜியாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதுபோல ஐஓஎஸ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கும் மெமோஜி வசதி வரவுள்ளது
மல்டி பிளாட்ஃபார்ம்: செல்போன் மூலம் கம்ப்யூட்டரில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ் அப் தற்போது, செல்போன், கணினி, ஐ பேட் என பல சாதனங்களில் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது.
பே சர்வீஸ்: கூகுள் பே, பேடிஎம் போன்ற வாலட்கள் போன்று வாட்ஸ் அப்பிலும் பே சர்வீஸை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தற்போது பீட்டா வெர்சனில் பயன்படுத்துவோரில் சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ் அப் பே சர்வீஸ் ( pay service) முழுமையாக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!