Viral
விண்ணிலிருந்து முன்னாள் வாழ்க்கைத் துணையின் வங்கிக்கணக்கை இயக்கிய வீராங்கனை : விண்வெளியில் முதல் குற்றம்!
விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து முன்னாள் வாழ்க்கைத் துணையின் வங்கிக்கணக்கை இயக்கியதாக விண்வெளி வீராங்கனை ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இது விண்வெளியில் நடந்த முதல் குற்றமாக கருதப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை அன் மெக்லைன் என்பவர் மீதுதான் இந்த புகார் எழுந்துள்ளது.
தன்பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் சம்மர் வொர்டன் இருவரும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2018ல் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். இந்நிலையில், மெக்லைன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தன்னுடைய வங்கி கணக்கை இயக்கியதாக சம்மர் வொர்டன் அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே பூமிக்குத் திரும்பிய அன் மெக்லைன், விண்வெளியில் இருந்து வங்கிக் கணக்கை இயக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும் சம்மர் வொர்ட்டனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை செய்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விண்வெளியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அங்கு தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபடுகின்றனர். எனவே, வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன் மெக்லைன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அமெரிக்க கிரிமினல் சட்டப்படி தண்டனை கிடைக்கக்கூடும்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!