Viral
பழங்குடிகளையும், புலிகளைகளையும் துரத்திவிட்டு யுரேனியம் எடுக்க முயற்சி? : சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு!
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்தச் செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒருவாரத்திற்கு கூட நீடிக்கவில்லை. இந்தியாவில் புலிகள் வாழும் காப்பகத்தை காலி செய்துவிட்டு மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஆளும் அரசு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் நல்லமலா காட்டுப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களால் இந்தச் செய்தி தற்போது வெளிவந்துள்ளது. இந்த மக்கள் வசிக்கும் காட்டுப் பகுதியில் சுமார் 83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யுரேனியம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, யுரேனியம் எடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அங்கிருந்த மலைவாழ் மக்களை விரட்டும் நடவடிக்கையில் ஆளும் அரசு இறங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி நல்லமலா காடுகளில் தான் அதிக அளவில் புலிகள் வாழ்கின்றன. அரசு கொண்டு வரும் இந்த மோசமான திட்டத்தால் புலிகள் வாழ்விடம் காணாமல் போகும் அபாயம் இருப்பதால் அரசு இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து அரசின் யுரேனியம் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஹைதராபாத் புலி பாதுகாப்பு சமூகம்’ (Hyderabad Tiger Conservation Society (HyTiCoS) கடும் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளது.
இதுதொடர்பாக புலிகளை பாதுகாக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவின் பெரிய புலிகள் காப்பகமான அம்ராபாத் புலிகள் காப்பகம் நல்லமலா காடுகளில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் உள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது 1,411 புலிகள் மட்டும்தான் இருந்தன. புலிகளைப் பாதுகாக்கும் பல்வேறு முயற்சிகளின் மூலம் உலகம் முழுவதும் புலிகளின் எண்ணிக்கை சுமார் 3,890 ஆக உயர்ந்தது. இதில் இந்தியாவில் மட்டும் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,967 புலிகள் உள்ளன. இந்தப் புலிகளை நல்லமலா காடுகள் தான் பாதுகாத்தது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த புலிகள் காப்பகத்தைக் காலி செய்துவிட்டு யுரேனிய சுரங்க அமைக்க வனப் பாதுகாப்பகம் அனுமதியளித்துள்ளது” என அவர் தெர்வித்துள்ளார்.
இதனிடையே அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர்களையும் காடுகளில் இருந்து துரத்தியடிக்கும் வேலைகளில் இந்த அரசும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இறங்கியுள்ளன. இதனால் 70 ஆயிரம் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் அவல நிலைக்குச் சென்றுள்ளனர். வன விலங்குகளிலுக்கு ஏற்பட்டுள்ள அதே நிலைமைதான் தங்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!