Viral

மதுபோதையில் காவலருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்: வழக்குப் பதிவு செய்த போலீஸ் (விடியோ)

தெலங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ’போனாலு’ என்ற திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிறு அன்று இரவு ஐதராபாத் வித்யா நகரில் திருவிழா நடை பெற்றது.

இதனையொட்டி அப்பகுதி இளைஞர்கள் சாலையில் மதுபோதையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறை ஆய்வாளர் எஸ்.மகேந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இளைஞர்கள் நடனமாடுவதை கட்டுப்படுத்த சென்ற ஆய்வாளரை, தீடிரென இழுத்து இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர், இளைஞரைப் பளார் என்று அறைந்தார். ஆனாலும் அந்த இளைஞர் மீண்டும் மது போதையில் நடனத்தை தொடர்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

அதனை அடுத்து காவல்துறை அதிகாரி எஸ்.ஐ மகேந்திரனுக்கு முத்தம் கொடுத்த வங்கி ஊழியர் பானுவின் மீது, அரசு அதிகாரி பணியில் இருக்கும் போது பணி செய்ய விடாமல் தொல்லைக் கொடுத்தது மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.