Viral
பல்கலைக்கழகத்தில் காவியைப் புகுத்தும் முயற்சிக்கு துணைபோகும் துணைவேந்தர் : மாணவர்கள் அதிர்ச்சி!
பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முன்பைவிட இன்னும் தீவிரமாக தனது காவிக் கொள்கையை நாட்டு மக்களின் மீது புகுத்தும் வேலையில் இறங்கியது. அதன் தொடக்கமாக புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை திணித்தது. அதனையடுத்து அரசு தேர்வுகளில் மாநில மொழிகளில் இனி வினாத்தாள்கள் வெளிவராது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் தேர்வு எழுதவேண்டும் எனும் உத்தரவை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அறிவித்தது.
இதனை ஜனநாயக அமைப்புகள் மற்றும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் கடுமையாக எதிர்த்து போராடினர்கள். அதனால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் பற்றியும், இந்துத்வா சிந்தனைகளையும் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையும் புகுத்தி வருகிறது. இதற்கு மாணவர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திரிபுரா மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி-யின் கொடியை பல்கலைக்கழக துணைவேந்தரே ஏற்றி வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-ன் கீழ் இயங்கும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பாக உள்ளது.
கல்வி நிலையங்களில் மத ரீதியாக மாணவர்களைத் தூண்டிவிடுவதும், ஒற்றுமையாக உள்ள மாணவர்கள் மத்தியில் இந்து - முஸ்லீம் பிரிவினைகளை ஏற்படுத்தும் வேலைகளையும் இந்த அமைப்பு மூலம் ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. இந்த அமைப்பினருக்கு கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக கேரளாவில் இந்த மாணவர்கள் அமைப்பினர் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்நிலையில்தான், குறிப்பிட்ட மத அடிப்படைவாத அமைப்பான ஏ.பி.வி.பி தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள பல்வேறு விதமான செயல்களை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஏ.பி.வி.பி-யின் கொடியை திரிபுரா மத்தியப் பல்லைக்கழக துணைவேந்தர் விஜய்குமார் லட்சுமிகாந்த் ராவ் தரூர்கர், பல்கலைக்கழக வளாகத்திலேயே ஏற்றி வைத்துள்ளார்.
இதையடுத்து, ஏபி.வி.பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதன் கொடியை ஏற்றிவைத்ததில் எந்த தவறும் இல்லை என்று தனது மத அடிப்படைவாத செயலை நியாயப்படுத்தும் முயற்சியிலும் துணைவேந்தர் விஜய்குமார் இறங்கியுள்ளார்.
இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் இது மாணவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மாணவர்கள் அச்சத்தில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. பல்லைக்கழக ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் மத அடிப்படைவாத அமைப்பிற்கு துணைவேந்தர் துணைபோவது கண்டிக்கத்தக்கது. என இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!