Viral
‘வைகைப்பெருவிழா’ பெயரில் மதுரையில் விழா நடத்தும் ஆர்.எஸ்.எஸ்: தமிழகத்தை காவி மயமாக்கும் முயற்சி ஆரம்பம் ?
மதுரை மாவட்டத்தில் உள்ள உள்ள வைகை ஆற்றில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவே அமையும். மாநிலம் முழுவதுமிருந்து சாதி, மதம் என வேறுபாடுகள் கடந்து பலர் இந்த திருவிழாவில் கலந்துக் கொள்வார்கள்.
இந்த சிறப்புமிக்க சித்திரை திருவிழாவில், இந்த முறை ஆர்.எஸ்.எஸ் தங்களின் காவி வண்ணத்தை புகுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் ஒன்றான ‘அகில இந்திய சந்நியாதிகள் சங்கம்’ சார்பில் வைகை பெருவிழா என்கிற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகாக நாடு முழுவதும் இருந்து சந்நியாதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஜனநாயக அனைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் பலரும் #SaveVAIGAIfromRSS என்ற ஹேஷ்டேக் மூலம் எதிர்ப்பு தெரிவித்துக் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுபோல நிகழ்ச்சியை மதுரையில் நடத்த அனுமதிப்பது மதச்சார்பின்மைக்கு ஆபத்தாக முடியும். இந்த நிகழ்ச்சியால் வடமாநிலங்களில் முஸ்லிம் மக்கள் எப்படி பாதுகாப்பு இல்லாத சூழலில் வாழ்கிறார்களோ அதே சூழலை தமிழகத்திலும் உருவாக்கப் பார்க்கிறார்கள். 12 நாட்கள் விழாவிற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும் என பலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
வட மாநிலங்களில் இந்து மத நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இந்து மக்களிடம் இருந்து சிறுபான்மையினரை பிரித்து வைக்கும் போக்கை மேற்கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ், இப்போது தமிழகத்திலும் அதே நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்