Viral

வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் விற்பனை : மோடி அரசின் அடுத்த முட்டாள்தனமான நடவடிக்கை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது என பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவந்தாலும் வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருவதாக சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகிறது.

மேலும், அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு பொருளாதார வளர்ச்சிக்காக எடுத்த சில மோசமான நடவடிக்கைகளே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், மீண்டும் மீண்டும் நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டங்களையே மத்திய அரசு கொண்டுவருவதாக திட்டக்குழுவில் உள்ள உறுப்பினர்களே குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் நிதி பற்றாக்குறையை குறைக்க உள்நாட்டு நிதியை பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே அதை மட்டுமே நம்பி இருக்காமல், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிட மோடி அரசு முடிவு செய்து ரூ. 70 ஆயிரம் கோடி நிதி திரட்ட இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இது பெரும் பொருளாதார சரிவுக்கு இட்டுச் செல்லும் என திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

மாண்டேக் சிங் அலுவாலியா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.மேலும் இளம் வயதிலேயே உலக வங்கியில் பணியாற்றியவர் இவர் ஐ.எம்.எப்-பிலும் (அனைத்துலக நாணய நிதியம் - International Monetary Fund) அதிகாரியாக பணியாற்றினார். இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துவதில், மன்மோகன் சிங்கிற்கு அடுத்தப்படியாக முன்னின்று செயல்பட்டவர்.

பொருளாதார வல்லுநர் மாண்டேக் சிங் அலுவாலியா

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “முன்பே இதுபற்றி பலமுறை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது, ஆனால், இதில் நன்மைகளைவிட கேடுகளே அதிகம் என்பதால் கைவிடப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், அந்நிய செலாவணியில் நிதியை திரட்ட வேண்டும் என்றால், வெளிநாட்டில் இருந்து முதலீடு செய்பவர்களை இந்தியாவில் விற்கப்படும் கடன் பாத்திரங்களை வாங்க வைக்கலாம். ஆனால் அதனை மேற்கொள்ளாமல், அந்நிய செலவாணி மதிப்பில் கடன் பத்திரங்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், கடன் பாத்திரங்கள் இந்திய ருபாய் மதிப்பில் இருப்பது தான் அரசுக்கு லாபம் தரும், அதுதான் நல்லது. ஆனால் அதற்கு மாறான நடவைக்கையைத்தான் மோடி அரசாங்கம் எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் விற்பனை அந்நிய செலவாணி மதிப்பில் கடன் பத்திரங்களை விற்பனை செய்தால் பிற நாடுகளைச் சேர்ந்த வணிக வங்கிகள் மட்டுமே பெரிய அளவில் லாபம் ஈட்டும். இதனால் அரசுக்கு லாபம் வராது, பலன்களும் மிக மிகக் குறைவு” என்று அவர் தெரிவித்துள்ளார்.