Viral

பா.ஜ.க.,வின் மோசமான தந்திரம் : தமிழக டி.வி விவாதங்களில் கலந்து கொள்ளாததன் பின்னணி இதுவா ? 

தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க பங்கேற்று 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த 10 நாட்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் தான் பா.ஜ.க திட்டமிட்டு பங்கேற்காமல் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலை இல்லை என்றும் எனவே இனி பாஜகவினர் விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க பங்கேற்க மாட்டர்கள் என ஜூலை 3ம் தேதியன்று தமிழிசை அறிவித்தார்கள். ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு கட்சி, தங்கள் கொள்கைகளை எந்த சுழலும் மக்களுக்கு விளக்கம் கடமை உள்ளது என்பதை பாஜக உணராமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பலரும் விமர்சனம் செய்தனர். அடிவாங்குவதற்கு பயந்து ஒளிந்து கொண்டதாகவும் பலர் கேலி செய்தனர்.

இதையடுத்து, பா.ஜ.க சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காத இந்த 10 நாட்களில், மத்திய அரசு பல நாசகாரத் திட்டங்களை அறிவித்ததுள்ளது. அந்த திட்டம் முழுவதும் தமிழகத்திற்கு விரோதமானது, தமிழக மக்கள் நலன்களுக்கு எதிரானதாக இருந்து உள்ளது. கடந்த 10 நாட்களில் தனது கொள்கைகாளான ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன், ஒரே மின்சாரம், ஒரே கொள்கை, ஒரே நாடு என்ற கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமுல்படுத்த வேலைகளை தொடங்கியுள்ளது.

மேலும், நீட் தேர்வு திருத்த மாசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்னரே குடியரசு தலைவர் நிராகரித்த நிலையில், அதனை மறைத்து வைத்து தற்போது திடீரென நிராகரித்த அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் மக்களை ஏமாற்றும் சதிச்செயல் நடந்துள்ளது.

அதையடுத்து, கடுமையாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை, தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, மேலும் உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதிக்கீடு போன்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, தபால் துறை தேர்வில் தமிழ் மொழியை நீக்கி, ஆங்கிலம் மற்றும் இந்தியை திணித்துள்ளது.

இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கையை எடுத்து விட்டு தொலைக்காட்சி விவாதங்களில்பங்கேற்றால் திட்டத்தை பெருமைப்படுத்தி பேசவேண்டும். இல்லையென்றால் வழக்கமான கத்தி கூச்சலிட்டு மற்ற கட்சினரை பேசவிடாமல் நிழச்சியை பதியிலேயே தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை மனதில் வைத்து தான் பங்கேற்கவேண்டாம் என்ற முடிவு செய்திருப்பார்கள் என தகவல் வெளிவந்துள்ளது.