Viral
விரைவில் வருகிறது அட்டகாசமான Google Map அப்டேட் : உங்களுக்குப் பிடித்த ஹோட்டல்களில் சலுகையும் உண்டு !
டெக் உலகின் வீழ்த்தப்பட முடியாத ஜாம்பவானாக Google நிறுவனம் மாறி இருக்கிறது. யாராக இருந்தாலும் கூகுளின் சேவைகள் இன்றி நாளைக் கடத்த முடியாது. அந்த அளவிற்கு நமது வாழ்வின் அங்கமாக மாறி இருக்கிரது கூகுள்.
அதிலும் பெயர் கண்டுபிடிக்க முடியாத சந்து பொந்து தெருக்களைக் கூட கண்டறிந்து செல்ல உதவும் கூகுள் மேப் மிகவும் பிரபலம். தற்போது இந்தியாவில் கூகுள் மேப் பயன்படுத்துபவர்களுக்காக 3 புதிய அப்டேட்களை அளிக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் ஏற்கெனவே உள்ள 2 அம்சங்களில் புதிய மாற்றங்களும், புதிதாக ஒரு அம்சமும் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கூகுள் மேப்பின் இயக்குநர் கிரிஸ் விடல் தேவாரா, கூகுள் மேப் பயன்படுத்துவோர் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பயணாளர்களுக்கு வழிகளை காட்சிப்படுத்துவதின் மூலம் எளிதாக கண்டறிய முடியும் என கூறியுள்ளனர்.
இதனால், இந்திய பயணாளர்களுக்காக கூகுள் மேப் மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
Explore Nearby என்பதில் ரெஸ்டாரண்ட், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம்., மருத்துவமனைகள், ஷாப்பிங் மால், ஹோட்டல் போன்றவைகளை எளிதில் கண்டறியும் படியும், இருந்த இடத்திலிருந்தே இந்தியாவின் பிற பகுதிகளை தேடி பார்க்க முடியும் படி போன்று மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
அதேபோல், For You என்ற சிறப்பம்சம் மூலம் வீடு, அலுவலகம், அல்லது வெளியில் எங்காவது சென்றிருக்கும் போது அதிகப்படியான பணிகளில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் தங்களுக்கு பிடித்தமான உணவோ, செல்லுமிடமோ எல்லாவற்றையும் அவரவர்களின் விருப்பதிற்கு ஏற்ப காண்பிக்கும். இந்த அம்சத்தின் கீழ் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூகுள் மேப் பல பரிந்துரைகளை கொடுக்கும்.
Offers-ல் இந்தியா டாப் ட்ரெண்ட் நகரங்களான சென்னை, பெங்களூர், கொல்கத்தா, புனே, மும்பை, டெல்லி, கோவா, அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், ஐதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்களில் அளிக்கக் கூடிய சலுகைகளை கூகுள் மேப் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் 15 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வதினால் 25 சதவிகிதம் வரை சலுகைகள் பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்