Viral
லவ் ப்ரேக்-அப் ஆனால் கவலை வேண்டாம் : மீள்வதற்கு இருக்கு இத்தனை வழிகள்! #relationshipgoals
காதலை நேசிக்காதவர்களும், சுவாசிக்காதவர்களும் இந்த உலகில் வெகுசிலரே. அதேபோல் காதலால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் இங்கு அடையாளம் காணப்படுகின்றனர். பொதுவாக நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்களுக்கான ஆற்றலே அதிகமாக கருதப்படுவதால் காதலில் தோல்வி அடைந்தவர்களையே இந்த சமூகம் முதலில் எடுத்துக்காட்டாக ஏற்றுக்கொள்ளும்.
அந்த அளவுக்கு காதலின் தோல்வி வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவ்வாறு வரும் காதல் தோல்விகளை இந்த காலத்தில் இரு பாலருமே கடப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சிலரது தவறான அறிவுரைகளால் காதலில் தோல்வியுற்றவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகி சமூகத்திலும் அவப்பெயர் பெறுகின்றனர். சிலர், உளவியல் ரீதியாக பல்வேறு மனப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆகவே, காதல் தோல்வியால் மனமுடைந்து இருப்பவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கும், மன திடத்தைப் பெறுவதற்கும் சில டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. அழ நினைக்கும் போதெல்லாம் அழுதுவிட வேண்டும்.
2. பிஸியாகவும் என்கேஜ்டாகவும் இருந்துகொள்ள வேண்டும். Leisure time is injurious to health.
3. நெருங்கிய நண்பர்களிடம் ஒப்புக் கொடுத்து விடுவது. அவர்கள் நம் மனதை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி, ராட்டினம் சுற்றி, ஆக்ஸிஜன் கொடுத்து, அப்படி இப்படியென எப்படியாவது தேற்றிவிடுவார்கள்.
4. வீட்டை மாற்றுங்கள். முடிந்தவரை நண்பர்களுடன் தங்க முயலுங்கள்.
5. நீண்ட பயணங்களை மேற்கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள்.
6. முதல் சில வாரங்கள் மட்டும் செத்துவிடலாமென தோன்றும். அந்தக் காலகட்டத்தை மட்டும் பிஸியாகவோ நண்பர்களுடனோ இருந்து கடத்திவிட்டால், பிறகு வலி பழகிவிடும்.
7. நிச்சயமாக குடி, போதை பக்கம் மனதை விடக்கூடாது. க்ரியேட்டிவ்வாக எதையாவது செய்ய முடிகிறதா பாருங்கள்.
8. இரண்டொரு மாதங்களில் திரும்ப வந்துவிடுவார் என நம்பிக்கை இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசியில் அழைத்தால் போதும். கன்னா பின்னாவென திட்டி போனை வைத்துவிடுவார். அந்த நம்பிக்கையும் போய்விட்ட பிறகு திருப்திகரமான சிங்கிளாக இருக்கலாம்.
9. மிக அற்புதமான டெக்னிக். நீங்கள் ஆண் எனில் ஒரு பெண்ணிடமோ, பெண் எனில் ஓர் ஆணிடமோ பேசத் துவங்குவது. காதலாக எல்லாம் இல்லை. வெறும் நட்பாகவோ; பேச்சுத்துணைக்கோ கூட இருக்கலாம். இது போன்ற ஒரு replacement சிறந்த தற்காலிக remedy.
10. சில நாட்கள் வரை இரவுப்பொழுதுகளில் வீடு உட்பட எங்கேயும் தனியே சிக்கிக் கொள்ளாதீர்கள்.
11. காதல் தோல்வி அடைந்த நண்பர்கள் சிலரை கூப்பிட்டு வைத்துக் கொண்டு தோல்விகளை எல்லாம் நகைச்சுவைகளாகச் சொல்லி சிரியுங்கள். இவற்றை கடைபிடித்தால் உறவு முறிவில் இருந்து கிட்டத்தட்ட தேறிவிடலாம்.
அதன்பிறகு, வாழ்க்கை காதல் மட்டும்தானா? அதைத் தாண்டி நிறைய இருக்கு பாஸ் என உங்களுக்கே தோன்றிவிடும்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !