Viral
குழந்தைக்கு இப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள் ?! ஆச்சர்யத்தில் ஆழ்த்திய Google நிறுவனம் !
இந்தோனேஷியாவை சேர்ந்த எல்லா கரின், ஆன்டி சாஹ்யா சாபுத்ரா என்ற தம்பதியருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவாகாததால் “பேபி பாய்” என்றே அழைத்து வந்துள்ளனர். அந்த பையனுக்கு அவனது பெற்றோர் கூகுள் என பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய கூகுளின் தந்தை, “மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலிருந்தே தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தேன். தொழில்நுட்பம் சார்ந்த பெயராக இருக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. விண்டோஸ், ஐபோன், மைக்ரோசாஃப்ட், ஐஓஎஸ் என்ற பெயர்களெல்லாம் கூட பரிசீலனையில் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறிய அவர், “எங்கள் மதத்திலிருந்து, நாங்கள் தீர்க்கதரிசியின் பெயர்களைக் கருத்தில் கொண்டோம். மேலும் வழக்கமான பெயர்களிலிருந்து, நாங்கள் அல்பார் திர்காந்தரா புத்ராவையும் என்ற பெயரை கூட யோசித்தோம். ஆனால் அப்பெயர் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.
வீட்டில் தனது மகனுக்கு கூகுள் என பெயர் வைத்துள்ளதாக கூறினேன். அந்த பெயர் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. என் மனைவி எல்லா கரினுக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. ஆனால், பொறுமையாக மூன்று மாதங்கள் அப்பெயரின் தனித்துவத்தை விளக்கியன்பின் என் மனைவி பையனுக்கு அப்பெயரை வைப்பதற்கு ஒத்துக்கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
கூகுளின் தாயார் எல்லா கரின் கூறுகையில், “கூகுளை போல தங்கள் மகனும் எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று பெற்றோர் விரும்பி அப்பெயரை வைத்துள்ளோம். மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக தங்கள் மகன் வாழவேண்டும் என்றும் அதற்காகவே இப்பெயரிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த கூகுள் நிறுவனம், அந்த குழந்தைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு பல்வேறு பரிசுகளையும் அனுப்பி வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் இந்தக் குழந்தையின் பெயர், உலகிலேயே வித்தியாசமான பெயர் கொண்டவர்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
Also Read
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?