Viral
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுடா.. முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்துத்வா கும்பல்
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு ஊக்குவிக்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்லச் சொல்லி, ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல், மேற்கு வங்கத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடாததற்காக மதபோதகரை ரயிலில் இருந்துஇந்துத்துவா கும்பல் ஒன்று தள்ளிவிட்டது. அந்த சம்பவம் முடிந்த 2 நாட்களில் மும்பை தானா பகுதியில் திவா என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டால் விடுவிப்பதாகக் கூறி மிரட்டி அவரின் காரை சேதப்படுத்தி அவரையும் அடித்து வன்முறையில் இந்துத்துவா கும்பல் ஈடுபட்டது.
பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமில்லாமல்,குல்லா அணியக் கூடாது என்றும் மிரட்டியுள்ளது.
இந்த தொடர் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், தற்போது, அசாம் மாநிலம் பர்பிட மாவட்டத்தில் ஃபக்ரூதின் அலி அகமது மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ஜோதி காவ்ன் பகுதியில், பைக்கில் வந்த நான்கு இந்துத்துவா கும்பல் அங்குள்ள மருத்துக் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஒருவரான ராகிபுல் ஹக்கிட்டிடம் பணம் விவகாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை கடையில் இருந்து வெளியே இழுத்த தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் உள்ள டீக்கடையிலிருந்த குர்பன் கான் மற்றும் புரான் அலி என்பவர் அதனை தடுக்க முற்பட்டனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.
மேலும் அவர்களை, 'ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட கட்டாயப்படுத்தப்பட்டனர்' என்று ஜாகிர் உசேன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் அடிப்படையில் தற்போது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!