Viral
48% விவசாய குடும்பத்தின் அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபடப்போவதில்லை : ஆய்வில் அதிர்ச்சி!
இந்தியாவில் விவசாயிகளின் நிலைமை நலிவடைந்த சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றார். விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
ஆனால் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மோடி அரசோ விவசாயிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவதாக தம்பட்டம் அடித்து வருகிறது. ஆனால், உண்மையில் அரசு அறிவித்த பல திட்டங்கள் விவசாயிகளுக்கு போதிய அளவில் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது ஆய்வின் மூலம் உண்மை எனத் தெரியவந்துள்ளது.
சமீபத்தில், விவசாயிகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் கிராமப்புற மக்கள் சந்திக்கும் பொருளாதார ரீதியிலான பிரச்னைகள் குறித்து, ‘கோன் கனெக்ஷன்’ (Gaon Connection) சர்வே நிறுவனம் ஆய்வு ஒன்றை அண்மையில் மேற்கொண்டது. அந்த நிறுவனம் உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேரிடம் ‘கோன் கனெக்ஷன்’ தனது ஆய்வை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில் இந்திய விவசாயிகளில் 43.6 சதவிகித விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் விளைபொருளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை எனவும், இந்தியாவில் ஐந்தில் ஒரு விவசாயி பருவநிலை மாற்றம் தங்களுக்கு மிகப்பெரிய சவால் என்றும் விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் உபகரணங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதாகவும், இந்த பிரச்னையால் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவர்கள் அந்த ஆய்வின் போது தெரிவித்துள்ளனர்.
அரசு விவசாயிகளுக்கு கடன் வழங்க பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார், அதன் மூலம் பயன்பெறலாமே என சர்வே மேற்கொண்டவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அப்போது, கிராமப்புறங்களைச் சேர்ந்த 60% விவசாய மக்கள், தங்களுக்குக் கடன் திட்டங்கள் சரியாக வந்து சேர்வதில்லை என்று கூறியுள்ளனர். ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் 25 சதவிகித விவசாயிகளுக்கும், ரூ. 5 லட்சம் வரையிலான கடன்கள் 15 சதவிகித விவசாயிகளுக்கும் மட்டுமே கிடைப்பதாக கூறியுள்ளனர்.
இதனைக்காட்டிலும் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்றும் இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அதாவது, 48% குடும்பங்கள் அடுத்த தலைமுறையில் விவசாயப் பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், மேற்கண்ட விஷயங்களில் மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்றும் ‘கோன் கனெக்ஷன்’ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!