Viral
2050-க்குள் 90% மனிதர்கள் மாண்டுபோவார்கள் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை!
2050-க்குள் மனித இனத்தின் 90% அழிந்துவிடும் என அதிர்ச்சி அணுகுண்டை வீசியிருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்.
இது வெறும் பயமுறுத்தும் எச்சரிக்கை அல்ல; எச்சரிக்கைக்கான காரணம் அந்தளவுக்கு உண்மையானது. எட்டு பில்லியன் மக்கள் வாழ்ந்துவரும் இவ்வுலகில் ஆண்டுதோறும் புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதை அழிவிற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்கள் அவர்கள்.
ஆய்வின்படி, உலகளாவிய வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் உயரும் எனக் கணிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் நாம் முன்னர் நினைத்ததை விட மிக விரைவாக இருத்தலியல் நெருக்கடியை நோக்கிப் பயணித்து வருகிறோம்.
மும்பை, ஷாங்காய் உள்ளிட்ட நகரங்கள் ஆபத்தில் அதிக உள்ளன. வெப்பநிலையில் 3 டிகிரி செல்சியஸ் உயர்வு உலகெங்கிலும் கடலோரப்பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கடல் மட்டம் 0.5 மீட்டர் உயரும்.
3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் வங்கதேசம் மற்றும் ஃப்ளோரிடாவின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிடும். அதே நேரத்தில், ஷாங்காய், லாகோஸ், மும்பை போன்ற பெரிய கடற்கரை நகரங்களுக்குச் சிதைவை ஏற்படுத்தி பெரும்பாலானோரை தட்பவெப்பநிலை அகதிகளாக நகரத்தை விட்டு ஓடச்செய்யும் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அதாவது, இப்போது நடைபெறும் இயற்கைச் சுரண்டல் தொடருமேயானால் 2050-ஆம் ஆண்டில் சுமார் 90% மனித இனம் அழிந்துவிடும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இயற்கைச் சுரண்டல், சூழலில் உள்ள பல்லுயிர்த்தன்மையை பாதித்து மனிதர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பருவநிலை மாற்றம் குறித்து பெரும் அச்சத்தை ஐநா-வும் வெளிப்படுத்தியுள்ளது. சூழலியல் குறித்து உலகளாவிய அளவில் நடைபெறும் ஆய்வுகள் அத்தனையும் மனிதர்களின் இருப்பு மிகவிரைவில் கேள்விக்குறியாகும் எனும் வாதத்தை முன்வைக்கின்றன. இது அனைவருக்குமான எச்சரிக்கை.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!