Viral

திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன?

நாடுமுழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பலர் தோல்விக்குப் பொறுப்பேற்று தங்களது பதிவில் இருந்து விலகினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவரான திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சமூக ஊடகங்களில் பெரிய அளவில் கொண்டு சேர்த்தவர் திவ்யா. கட்சியில் உள்ள சில தலைவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் சமூக வலைதள பணியை சிறப்பாக செயலாற்றியவர். இவர் சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

இதனிடையே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி காரணமாக அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவிலிருந்து, அவர் விலகிவிட்டடதாக வெளியான தகவலை திவ்யா மறுத்துள்ளார்.

முன்னதாக ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற அக்கட்சி தெரிவித்தது. இதன் விளைவாகத் தான் திவ்யா ட்விட்டர் கணக்கை நீக்கினார் என தகவல்களும் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.