Viral

மோடிக்கு அமெரிக்க விசா வாங்கிக்கொடுத்த ஜெய்சங்கர்... அமைச்சர் ஆனதன் பின்னணி என்ன ?

1955-ம் ஆண்டு தில்லியில் பிறந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப் பணிகள் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர், 1980களுக்கு பிறகு ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றினர். அதன் பின் தொடர்ச்சியாக அமெரிக்கா, செக் குடியரசு, சீனா, சிங்கப்பூர் என பல நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார். வெளியுறவுத்துறையில் முக்கியப் பிரச்னைகளைக் கையிலெடுத்து சிறப்பாக அதை செய்து முடித்து பாராட்டுகளை பெற்றவர்.

குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, நடந்த கலவரத்திற்கு மோடி முக்கிய காரணம் என்பதால், அவருக்கு அமெரிக்கா விசா தர தொடர்ந்து மறுத்துவந்தது. 2014-ம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தவர் ஜெய்ஷங்கர். மோடிக்கு மறுக்கப்பட்ட விசாவை மீண்டும் கிடைக்கச் செய்தவர் ஜெய்சங்கர்.

அதன்பின்னரே மோடிக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு தற்பொழுது மோடி அமைச்சரவையில் ஜெய்சங்கருக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

கடந்தாண்டு டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மோடியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் கட்சி சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தான்.

இவரின் மீது பலர் நல்ல விதாமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், சில நேரங்களில் இவரது பல்வேறு அணுகுமுறைகள் மனித மாண்புகளை மீறியதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில், இவரின் அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும் கூறப்படுவதுண்டு.

2015ம் ஆண்டு நேபாளத்தில் பெரும் நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்திய அனுப்பிய நிவாரண பொருட்களை தடுத்து நிறுத்தினார் ஜெய்சங்கர். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கும்படி நேபாள அரசை நிர்பந்தம் வைக்கப்பட்டது. நேபாளம் அதை ஏற்றுக் கொண்ட பிறகே நிவாரணப் பொருட்களை அனுமதித்ததாகவும் கூறுப்படுகிறது.

முன்பைக் காட்டிலும் தற்போது கூடுதல் அதிகாரம் ஜெய்சங்கர் கைக்கு சென்றுள்ளது. பாகிஸ்தானுடனான பிரச்னை, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த தடை, சீனாவுடனான எல்லை பிரச்னை, இலங்கையைச் சுற்றி இந்தியப் பெருங்கடலில் நடக்கும் சர்வதேச அரசியல் போன்ற பல சவாலான பிரச்னைகளை ஜெய்சங்கர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!