Viral
இலங்கையில் தொடரும் பதற்றம்... மீண்டும் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு!
ஈஸ்டர் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 359 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கோர சம்பவத்திற்குப் பிறகு இலங்கையில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் சிறிசேன.
இதற்கிடையில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மேலும் இது நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை கொழும்புவின் புகோடாவில் உள்ள நீதிமன்றத்திற்கு அருகே சிறிய அளவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு இருக்கையில், இன்று பிற்பகல் நுவேரியாவில் உள்ள ஹவேலி என்ற பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!