Videos

“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !

2024 தேர்தல் களம் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவை இம்முறை வீட்டுக்கு அனுப்ப இந்தியா கூட்டணி களத்தில் தீவிரமாக உழைத்து வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான் என மார்தட்டிக் கொண்ட பாஜகவினர் பலர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், இது நடக்கும் அது நடக்கும் என தோல்வி பயத்தில் உறக்கமுடியாமல் தவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக 3 வது முறையாக தான் பிரதமர் என நினைத்து இருந்த மோடிக்கு, வரவிருக்கும் தோல்வி பெரும் பதற்றத்தை உண்டாக்கியதாக அவரின் சமீபத்தில் பேச்சுக்களே தெரிவிக்கிறது. பரப்புரையில் பாஜக அரசு பற்றி பேசுவதற்கு பதிலாக, சிறப்பாக ஆட்சி நடத்தும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பற்றி அவதூறு சொல்கிறார். இந்து - முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறார்.

இந்த சூழலில் மோடியின் சமீபத்திய நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ஷேக் சில்லி ஒரு சிறந்த நகைச்சுவை கதாபாத்திரம்.வினோதமான செயல்களினால் நன்கு அறியப்படும் கதாபாத்திரம் அது. அவர் உடைகளை அணிந்து அணிந்து விருந்துகளில் கலந்துகொள்வது போன்ற கோமாளித்தனங்கள் மற்றும் நிறைய பொழுதுபோக்குகளை வழங்கி மக்களை சிரிக்க வைக்க வைத்திருக்கிறார்.

சில சமயம் போரை நிறுத்துவது பற்றி பேசுவார், சில சமயம் போரை ஏழைகளுக்கு கருத்து சொல்வார், சில சமயம் வெளிநாடுகளில் தான் புகழ் பெற்றவர் என்று தானே சொல்லிக்கொள்வார், சில சமயம் முதலையுடன் சண்டைபோட்ட பெருமையை பேசுவார், சில சமயம் தவம் செய்த கதைகள் சொல்வார், சில சமயம் டிஜிட்டல் கேமராக்கள் வழியே வனப்பகுதிக்கு சென்ற அனுபவம் சொல்லி மகிழ்வார். அவர்களுக்கு முன்னாள் இருப்பவர்களும் சிரித்துக்கொண்டே தலையை அசைக்கிறார்கள். மக்களை மகிழ்விப்பதற்காக இந்தக் கதைகள் நன்றாக விற்கப்படும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

இப்போது இதை கேட்டவுடன் உங்கள் மனம் தானாக பெரிய டிவி சேனல்களில் காண்பிக்கப்படும் ஒருவரின் பேட்டியை நோக்கி செல்கிறது என்றால் அது என் தவறல்ல. நான் ஷேக் சில்லியின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?