Tamilnadu
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.11.2024) கடலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், விருத்தாசலம் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மேல்புவனகிரி, கம்மாபுரம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 12,100 பயனாளிகளுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1,001 பயனாளிகளுக்கு ரூபாய் 80,00,000/- மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு, ரூபாய் 74,98,550/- மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 9,285 பயனாளிகளுக்கு, ரூபாய் 71,24,00,000/- மதிப்பிலும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு, ரூபாய் 40,000/- மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் தறை சார்பில் 55 பயனாளிகளுக்கு, ரூபாய் 36,32,310/- மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.42,50,380/- மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு,ரூ.61,37,950/-மதிப்பிலும்,
கூட்டுறவுத் துறை சார்பில் 600, பயனாளிகளுக்கு, ரூபாய் 5,00,00,000/- மதிப்பிலும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 1,000 பயனாளிகளுக்கு, ரூபாய் 16.00.000/- மதிப்பிலும், சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு, ரூபாய் 44,66,210/- மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு, ரூபாய் 71,620/- மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு, ரூபாய் 33,800/- மதிப்பிலும், தாட்கோ சார்பில் 6 பயனாளிகளுக்கு, ரூபாய் 13,60,180/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 5,09,000/- மதிப்பிலும், என மொத்தம், 12,100 பயனாளிகளுக்கு, ரூபாய் 80,00,00,000/- கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!