Tamilnadu

மருத்துவ பட்ட மேற்படிப்பு... மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு... - தமிழ்நாடு அரசு அதிரடி!

அரசு மருத்துவமனைகளில் அரசு சாரா மருத்துவர்களாக பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் ஒராண்டாக குறைத்ததற்கு அரசுக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.

எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது. இது குறித்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணிகள் இயக்குனர் உள்ளிட்ட மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகளுடன் அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது. அதில், 2 ஆண்டுகளாக இருந்த அரசு சாரா ஒப்பந்த பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிப்பை வரவேற்பதாக மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆண்டுக்கு 700 முதுநிலை பட்டதாரி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு சாரா பணியில் சேருகின்றனர்.

இதில் வெளிமாநில பட்டதாரி மருத்துவர்களும் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழக மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் எனவும், பயிற்சி முடித்தவுடன் தனியார் மருத்துவமனையில் பலர் சேர்ந்துவிடுகின்றனர்.

இதனால் மருத்துவர்கள் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனை போக்க விருப்பப்படும் முதுநிலை மருத்துவர்களை பணியில் தொடர வைக்க வேண்டும்.

இதன் மூலம் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் குறைக்கப்படுவதோடு, அரசு விரைந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள எளிமையாக இருக்கும். இதனால் நிரந்தர வேலைவாய்ப்பை செய்து தர வேண்டும் எனவும் மருத்துவ மாணவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கையும் வைக்கின்றனர்.

Also Read: கலைஞரின் கனவு இல்லம் - 1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் : முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகள்!