Tamilnadu
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் விதமாக கண்ணாடி பாலம் அமைக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.
தற்போது 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலத்தில் நடுவில் 2.5 மீட்டர் நீளத்திற்கு கண்ணாடியும் அமைக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் முடிவடையயும் நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில், கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ” விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை யையும் இணைக்கும் கண்ணாடி பாலம் பணிகள் 85% முடிவடைந்துள்ளது. திருவள்ளுவர் சிலை அமைத்து வெள்ளி விழா காணும் நிலையில் அன்றைய தினத்தில் முதலமைச்சரால் பாலம் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
கண்ணாடி பாலத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாலத்தின் பெயர் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
-
உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் அத்துமீறல்! : 5 காவலர்கள் இடைநீக்கம்!