Tamilnadu
”யார் நினைத்தாலும் டெல்டா பகுதியில் இது நடக்கவே நடக்காது” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொல்வது என்ன?
திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கேந்தி பகுதியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பங்கேற்றார்.
இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,”திராவிட மாடல் ஆட்சியில் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் முன்னெடுப்பில் தான் ஒட்டுமொத்த டெல்டா பகுதியே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
எந்த காலத்திலும், யார் நினைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியாது. இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டி அதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரக்கூடிய வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வரலாற்றிலேயே முதல்முறையாக ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து அதில் 15000 மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் நாயகர் ஆட்சியில் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் விவசாய விலைப் பொருளுக்கு மதிப்பு கூட்டும் வேலை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மக்கள் பயன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கலைஞரின் கனவு இல்லம் - 1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் : முழுவீச்சில் நடைபெற்று வரும் பணிகள்!
-
ஆசிரியை படுகொலை: "குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்"... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
-
கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த மாநில அரசு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
-
அரியணையை வெல்லப்போவது அரசனா? அரசியா? : போராட்டங்கள், சூழ்ச்சிகள் - BB வீடு!
-
“வாக்களிக்க சென்றால் துப்பாக்கியால் சுடுவோம்” - இஸ்லாமியர்களை மிரட்டிய உ.பி போலிசார்... வீடியோ வெளியீடு !