Tamilnadu
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் இன்று முதல் நவ.25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும். இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
-
யார் உங்களுக்கு ரூ.5 கோடி பணம் அனுப்பியது? : பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
-
"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !
-
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!
-
கோவையில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக வதந்தி : அம்பலமான தினமலரின் பொய் செய்தி !