Tamilnadu
சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா! : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIDF) 2025-ஐ அறுமுகம் செய்து வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்ய புத்திரன், சென்னை நூலக ஆணைய குழு தலைவர் கோபண்ணா, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் சோ.மதுமதி, பொது நூலக இயக்குநர் பொ.சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழை உலகிற்கும் உலக அளவில் இருக்கும் என்ற உன்னதமான நோக்கில் தமிழக அரசால் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2025 ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது” என்று அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில் மதிப்புறு விருந்தினராக (Guest of Honour) இத்தாலியைச் சேர்ந்த பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் கலந்து கொள்ள உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பன்னாட்டு புத்தக திருவிழா 2025 பற்றி காணொளி வெளியிடப்பட்டது.
சர்வதேச புத்தக திருவிழா 2023 ஆம் ஆண்டு 47 புத்தகங்களும் , 2024 88 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்த 2025 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில் 50 நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள் , பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று காணொளி காட்சியில் தெரிவிக்கப்பட்டது.
Also Read
-
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!
-
கோவையில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக வதந்தி : அம்பலமான தினமலரின் பொய் செய்தி !
-
நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து செயல்படுங்கள் : நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி MP மின்னஞ்சல் !
-
ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக “Swami Chatbot” செயலி... முதலமைச்சர் கோரிக்கையின் பேரில் நடவடிக்கை !
-
”சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” : LIC இந்தி திணிப்பு - துணை முதலமைச்சர் உதயநிதி ஆவேசம்!