Tamilnadu
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நடத்துநர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியான அறிக்கையில்,மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமைக் கட்டணம் குறித்து நடத்துநர் மற்றும் பயணிகளிடையே சுமுகமான உறவை உறுதி செய்யும் வகையில் பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் (Suggestion) /புகார்களின் அடிப்படையில் மா.போ.கழகம் இயக்கும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு (Luggage), சுமைக்கட்டணம் வசூலிக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பயணிகளிடம் நடத்துநர்கள் பின்பற்றி சுமைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்படுகிறது.
மா.போ.கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்/ பைகள், கேமிரா போன்ற கையடக்கமான சாதனங்கள், Laptops, சிறிய அளவிலான கையில் எடுத்து செல்லதக்க மின் சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் (Wheel Chair), கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் முதலியவைகளும் இலவசமாக ஏற்றிச்செல்ல கூடிய சுமைகளாகும்.
மா.போ.கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65cm (Medium Size) அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
மா.போ.கழக பேருந்துகளில் ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
பயணிகள் எடுத்துவரும் 65cm (Large size) அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைக்களுக்கு 1 பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைககளை அனுமதிக்கக் கூடாது.
சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.
செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும்
டிராலி வகையான சூட்கேஸ்கள் கொண்ட சுமைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த விளக்கத்தினை நடத்துநர்கள், போக்குவரத்து மேலாளர்கள், ஆய்வாளர்கள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மற்றும் நேரக்காப்பாளர்கள் அனைவருக்கும் விளக்கிக் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து கிளைமேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு மேலாண் இயக்குனர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!