Tamilnadu
கழிவுநீர் மறுசுழற்சி தர நிலைச் சான்றிதழ் பெற திட்டம் : பொதுமக்களிடம் கருத்து கேட்கும் சென்னை மாநகராட்சி !
‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செது பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்வது மற்றும் கழிவுநீரை முழுமையாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை அகற்றுவதற்கான உள்கட்டமைப்பை சிறப்பாக கையாளும் நகருக்கு ‘நீா் பிளஸ்’ (வாட்டா் +) எனும் தர நிலைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த தரநிலையை சென்னை மாநகராட்சி அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில்;
சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோக நீா் மற்றும் கழிவுநீா் சேகரிக்கப்பட்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. இதனால் நீா் பிளஸ் நகரம் எனும் தரநிலையை அடைய சென்னை மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள்ளாக solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி” : கள ஆய்வு குறித்து, உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!
-
"ஆரிய அடிமைகளுக்கு வயிற்றெரிச்சல் வர காரணம் இதுதான் காரணம்" - துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது என்ன ?
-
மருத்துவ துறையில் 100 % காலியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
-
கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஏன் ? - நடிகை ஜோதிகா கேள்வி !
-
சுப்மான் கில்லுக்கு காயம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மற்றுமொரு தமிழக வீரருக்கு வாய்ப்பு ?