Tamilnadu

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் : புதிய வாக்காளர், திருத்த, பணிகளை மேற்கொள்ளலாம் !

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்.29-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது....

இதன் ஒருபகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இன்று, நாளை மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் விவரங்கள் பெறப்பட்டு அவை வாக்காளர்களின் விவரங்களுடன் இணைக்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (01.01.2007-ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7 ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம்-8 ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகல் வழங்கப்பட்டு வருகிறது.

Also Read: 'முதல்வர் படைப்பகம்' - இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் திட்டம் : தினத்தந்தி தலையங்கம் புகழாரம் !