Tamilnadu
கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தீவிரம்! : பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து நடவடிக்கை!
தெலுங்கு மொழி பேசக்கூடிய மக்கள் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த முன்னாள் நடிகை கஸ்தூரி மீது பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சமன் வழங்குவதற்காக காவல்துறை திட்டமிட்டிருந்தனர்.
அவ்வகையில், கோபாலபுரம் போயஸ் கார்டனின் அமைந்துள்ள கஸ்தூரியின் இல்லத்திற்கு சென்று பார்த்த பொழுது, அவர் தனது செல்போனை அனைத்துவிட்டு தலைமறைவாகி விட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக நடிகை கஸ்தூரியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரியின் சார்பில் பிணை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று (நவம்பர் 14) மதுரை கிளை நீதிமன்றம் கஸ்தூரி தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
உத்தரவினை தொடர்ந்து தற்பொழுது கஸ்தூரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சென்னை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவரது செல்போன் சிக்னலை வைத்தும் அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசிய நபர்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ள காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
Also Read
-
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
-
”திமுக ஆட்சி என்றும் மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.22 கோடியில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் 2ஆம் தொகுப்பு : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
ரூ.1,000 கோடி முதலீடு; 15,000 பேருக்கு வேலை: அரியலூரில் DeanShoes நிறுவனம் -அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
7 மாதங்களுக்கு பிறகு... 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி: பரபரப்பான டெல்லி மேயர் தேர்தல் !