Tamilnadu
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டத்தில் 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும்,பெரம்பலூர் மாவட்டத்தில் 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் ப் பயணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் நதியனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வெற்றியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் நகரங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவைகள் மேம்படுத்தப்படும்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 645 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, தடையின்றி போதிய குடிநீர் வழங்கப்படும்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
அரியலூர் வட்டம், வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் துணை சுகாதார நிலையங்களில், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 35 துணை சுகாதார நிலையங்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.
கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், கூடலூர் ஜமீன்பேரையூர் சாலையில், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சுத்தியிருக்கும் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், 24 கோடி ரூபாய் செலவில் மருதையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வெங்காய விற்பனை மையம் அமைக்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்தர கல்விப் பயிற்சிகளை வழங்கும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியை மேம்படுத்தும் வகையில், 56 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
அதுமட்டுமல்ல, இன்று காலை அமைச்சர் மற்றும் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நம்முடைய அன்பிற்குரிய திருமாவளவன் அவர்களுடன் அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் என்னை இன்று காலை சந்தித்தபோது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய வகையில் ஒரு நீதிமன்ற வளாகம் தேவை என கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்று அரியலூரில் 101.50 கோடி ரூபாய் செலவில் ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Also Read
-
”ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” : UGC தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்!
-
இவர்கள்தான் சாப்பாடு கொடுக்கணும் : ஆர்டர் போட்ட பிக்பாஸ் : இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார்?
-
அரசு விளையாட்டு போட்டி பேனரில் இஸ்லாமிய சின்னமா?: திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி -TN Fact Check விளக்கம்
-
”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
-
மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !