Tamilnadu
234 தொகுதிகளிலும் ஆய்வுகள் நிறைவு! : ஆய்வு அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் தகவல்!
234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234 ஆவது ஆய்வை சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜி கே எம் காலணி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
234 வது தொகுதியாக முதலமைச்சர் தொகுதியில் அமைந்துள்ள பள்ளியில் விரிவான ஆய்வை மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியர்களிடம் தேவைகளை கேட்டறிந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
அதனைத் தொடர்ந்து கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது,
“பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் முதலமைச்சர் சார்பிலும் என் சார்பிலும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்.
234 தொகுதிகளிலும் 77 வகைகளில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் பொருட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஆய்வு 234 வது தொகுதியாக முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆய்வுக்கு வரும் வழியில் முதலமைச்சர் அவர்கள் என்னை அழைத்துப் பேசினார்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் இதுவரை 2,467 கோடி ரூபாய் பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியால், உழைப்பால், தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் எத்தனை கட்டிடங்கள் பள்ளிகளுக்காக கட்டப்பட்டுள்ளன என தெரியப்படுத்த வேண்டும்.
234 தொகுதிகளில் நடைபெற்ற பள்ளி ஆய்வுகளின் அறிக்கையை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்” என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!