Tamilnadu
”தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு” : ராஜ் கௌதமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950 ஆண்டு பிறந்தவர் எஸ்.புஷ்பராஜ் என்கிற ராஜ் கெளதமன். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்த இவர் மதுரையில் உயர்நிலை கல்வியையும், பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.பண்பாட்டு ஆய்வாளராக அறியப்பட்ட ராஜ் கௌதமன், தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் என பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ், காலச்சுவை ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். சார்லஸ் டார்வினின் தி ஒர்ஜின் ஆஃப் ஸ்பைசெஸ் உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்த ராஜ் கௌதமன் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள் - படைப்பு - தன்வரலாறு - விமர்சனம் - மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனைமுகமான ராஜ் கௌதமன் அவர்களது மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது இணையர் பேராசிரியர் க.பரிமளம், அவரது தங்கை எழுத்தாளர் பாமா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் அறிவுப்புலத்தைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பெற்றோர்களே உஷார்... எலி மருந்தால் பலியான குழந்தைகள்... குன்றத்தூரை உலுக்கிய சோகம் !
-
“இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டம் குறித்து அவதூறு... ஆதாரத்துடன் TN Fact Check விளக்கம்!
-
இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை.. உ.பி. மருத்துவரின் அலட்சியத்தால் கதறும் சிறுவன்!
-
தெரியாமல் 20 செ.மீ. Tooth Brush-ஐ விழுங்கிய பெண்... ஷாக்கான மருத்துவர்கள்... பிறகு நடந்தது என்ன?
-
”சிறு வணிகர்களின் வாழ்வை முடக்கும் மோடி அரசு” : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!