Tamilnadu
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் Help Desk : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு - முழு விவரம் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வித் துறையின்கீழ் இருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அதன் விவரம்:-
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும் ஆகியோருக்கு பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள். துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.
அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" (Help Desk) கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் (user friendly) அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!