Tamilnadu
கூட்டுறவுத்துறையில் ரூ.20.47 கோடிக்கு தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு விற்பனை மற்றும் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று (08.11.2024) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-
பண்டிகைகள் என்பது தமிழர்களுடைய வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாகும். அத்தகைய பண்டிகைகளை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் 31.10.2024 அன்று நடைபெற்ற தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை மற்றும் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆகியவை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்றவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை 28.10.2024 முதல் நடைபெற்றது.
இதில், பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இவ்விற்பனையை ஏற்பாடு செய்த அலுவலர்களுக்கும், சிறப்பாக விற்பனை மேற்கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதே போல, வரும் பொங்கல் திருநாளிலும் இது போன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திடவும், சிறப்பாக மேற்கொள்ளவும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
Also Read
-
பெற்றோர்களே உஷார்... எலி மருந்தால் பலியான குழந்தைகள்... குன்றத்தூரை உலுக்கிய சோகம் !
-
“இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டம் குறித்து அவதூறு... ஆதாரத்துடன் TN Fact Check விளக்கம்!
-
இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை.. உ.பி. மருத்துவரின் அலட்சியத்தால் கதறும் சிறுவன்!
-
தெரியாமல் 20 செ.மீ. Tooth Brush-ஐ விழுங்கிய பெண்... ஷாக்கான மருத்துவர்கள்... பிறகு நடந்தது என்ன?
-
”சிறு வணிகர்களின் வாழ்வை முடக்கும் மோடி அரசு” : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!